‘கண்ணுக்கே தெரியாத சிலை’!.. ஏலம்போன தொகையை மட்டும் கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஆர்டிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கண்களுக்கு தெரியாத சிற்பத்தை ஒருவர் 13 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த சல்வடோர் கராவ் (Salvatore Garau) என்ற சிற்ப கலைஞர், ‘நான்’ என்ற தலைப்பி ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கண்களுக்கு தெரியாத இந்த சிற்பத்தை ‘Vaccum’, அதாவது வெற்றிடம் என அதன் வடிவமைப்பாளர் அழைக்கிறார்.
இதனை அடுத்து இந்த சிற்பத்தை அவர் ஏலம் விட முடிவு செய்துள்ளார். ArtNet என்ற ஏல மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் இந்த சிற்பத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 முதல் 7 லட்சம் வரை மட்டுமே விலை போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது மகிழ்ச்சி அளிப்பதாக சல்வடோர் கராவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதேபோல் கண்களுக்கு தெரியாத புத்தர் சிலையை சல்வடோர் கராவ் உருவாக்கியுள்ளார். அதை இத்தாலியின் மிலன் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடமான பியாஸ்ஸா டெல்லா ஸ்கலா (Piazza Della Scala) இடத்தில் காட்சிக்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
