இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 28, 2020 10:38 AM

1. வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த இரு நாட்களில் திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்து உயிரிழந்தது அக்கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

important-headlines-read-here-for-morning-february-28

2. குவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்!

3. கேரள மாநிலம் இடுக்கியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இடுக்கி அணைக்கட்டு அமைந்துள்ள இடம் அருகே இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தகவல் அளித்துள்ளது.

4. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நலிவுற்றிருக்கும் சூழலில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

6. டெல்லியில் அமைதி திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறியுள்ளார்.

7. British Airways நிறுவனம், சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கான விமானச் சேவைகளை அடுத்த மாதம் ரத்து செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது. லண்டனிலிருந்து சிங்கப்பூர், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கான இருவழிப் பயணங்கள் பாதிக்கப்படும். COVID-19 கிருமித்தொற்றால், அந்நாடுகளுக்கான பயணங்களின் தேவை குறைந்துள்ளது என்று British Airways தெரிவித்தது.

8. துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா நஜிமுதீன் கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

9. ஈரானில் விமான சேவை நிறுத்தப்பட்டதால், குமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 800 இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருவதாக வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்

10. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.75, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.21-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : #ONELINENEWS