இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 27, 2020 10:30 AM

1. திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை கே.வி.கே.குப்பத்தில் அவரது இல்லத்தில் கே.பி.பி.சாமி உயிர் பிரிந்தது. 2006-2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக கே.பி.பி.சாமி பதவி வகித்தவர்.

important-headlines-read-here-for-evening-feb-27

2. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளதால் பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

3. சீனாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் நாடு திரும்பினார். 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டவரையும் விமானப்படை விமானம் மீட்டு வந்தது.

4. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்திருந்த நிலையில் வன்முறையில் படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் சிலிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

5. கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலைமுயற்சி மேற்கொண்டுள்ளார். கைமணிக்கட்டில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஜூலிக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6. டெல்லி கலவரத்தை கண்டித்து கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7. வீட்டை அபகரித்தாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

8. நேற்று சவரன் ரூ.32,776க்கு விற்பனையாகி வந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ.288 குறைந்து ரூ.32,488 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,097 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.36 விலை குறைந்து ரூ.4,061க்கு விற்பனையாகிறது.

9. அடிப்படை வசதிகளை முழுதாக செய்து முடிக்காத வண்டியூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை கிளை நீதிமன்றம்.

10. அமெரிக்காவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவு, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

Tags : #ONE LINE NEWS