”தூங்குறது, சாப்பிடுறது'ன்னு எல்லாம் ஒண்ணா தான் பண்ணுவோம்... BOYFRIEND கூட ’ஒரே பையன்’ தான்... அதே மாதிரி, ஒரே நேரத்துல குழந்தை பெத்துக்க ஆசப்படுறோம்...!” - இரட்டை சகோதரிகளின் 'வினோத விருப்பம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தை சேந்த இரட்டை சகோதரிகள் அன்னா மற்றும் லூசி. உலகின் ஒத்த இரட்டையர்கள் என கருதப்படும் இவர்கள், உருவம் தொடங்கி உடலின் வடிவம் வரை அனைத்திலும் ஒன்றாக இருக்க வேண்டி 14 அறுவை சிகிச்சைகள் வரை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரும் தங்களது வாழ்நாள் முழுவதும், இணை பிரியாமல் இருக்க ஒருவருடன் இணைந்து தங்களது வாழ்நாளை கழிக்க விருப்பப்பட்ட நிலையில், பென் பைர்ன் என்பவர் இரட்டை சகோதரிகளுடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து மூன்று பேரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஒன்றாக தூங்குவது, ஒன்றாக உண்பது, ஒரே நேரத்தில் மற்ற அனைத்து வேலைகளையும் செய்வது என தங்களது சிறு வயது முதல் இந்த இரட்டை சகோதரிகள் அனைத்திலும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது தங்களது காதலரால் கர்ப்பம் தரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாது, இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உடலுறவு மூலம் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு மிகமிக குறைவு என்பதால், ஐ.வி.எப் என்னும் முறையை இருவரும் முன் வைக்கின்றனர்.
அதாவது, பென் பைர்ன் விந்துக்களை இரட்டையர்கள் இருவரின் கரு முட்டைகளில் ஒரே நேரத்தில் செயற்கை முறையில் செலுத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகமுள்ளதால் இந்த முறையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். 'பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் இரு உடலில் ஒரு உயிராக வாழ்ந்து வருகிறோம். அதனால் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்' என இருவரும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
