"இறந்துபோன அப்பறமும் ஆவியாக கல்லறையில் காத்திருக்கும் அம்மா".. உலகை உலுக்கிய இரண்டு புகைப்படங்கள்..நூறாண்டுகளாக தொடரும் மர்மம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jun 22, 2022 07:54 PM

பிரசவத்தின் போது மரணமடைந்த பெண் ஒருவர், கல்லறையில் அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் இரண்டு புகைப்படங்கள் பல ஆண்டுகளாகவே பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Graveyard pic captures ghost of woman who died in childbirth

Also Read | அப்படிப்போடு... 11 ஆம் வகுப்பில் பாடப்பிரிவு ஒதுக்கீடு.. பள்ளிக்கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு..!

அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டனைச் சேர்ந்தவர் சூ ஹோவர்ட் ஹார்டி. இவருடைய கணவர் பெயர் காஸ்டன். 1888 ஆம் ஆண்டு சூ கர்ப்பமாக இருந்திருக்கிறார். பிரசவத்தில் இந்த தம்பதியுடைய குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு ஆறு நாட்கள் கழித்து சூ மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கல்லறை

சூ வாழ்ந்துவந்த பகுதிக்கு அருகே 1680 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயின்ட் பிலிப்ஸ் தேவாலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள கல்லறையில் சூ ஆவியாக அவ்வப்போது வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த கருத்தினை மெய்ப்படுத்தும் விதமாக கடந்த 1987 ஆம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த ஹாரி ரெனால்ட் என்னும் புகைப்படக் கலைஞர் எடுத்த போட்டோ உலகம் முழுவதும் வைரலானது. அந்த புகைப்படத்தில், வெள்ளை நிற உடை அணிந்த பெண் ஒருவர் கல்லறைக்கு முன்பாக தலைவணங்கியபடி நிற்பது மங்கலாக தெரிகிறது. இது உண்மையா பொய்யா என உலகமே அப்போது விவாதித்து வந்தது. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், அதே கல்லறையில் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரு பெண்ணின் உருவம் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Graveyard pic captures ghost of woman who died in childbirth

இரண்டாவது புகைப்படம்

முதன்முதல் இந்த மர்ம புகைப்படத்தை எடுத்த ரெனால்ட், பல ஆண்டுகள் முயன்றும் அதில் உள்ள பெண்ணின் உருவம் குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் 35 ஆண்டுகள் கழித்து தற்போது அதே கல்லயறையில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாவாசியான சேஸி அலெக்சிஸ் லான் என்னும் பெண், கல்லறையை புகைப்படம் எடுத்தபோது அதில் அந்த மர்ம பெண்ணின் உருவமும் பதிவாகியிருக்கிறது.

Graveyard pic captures ghost of woman who died in childbirth

உள்ளூர் மக்கள் அந்த பெண்மணி 134 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன சூ தான் என்கிறார்கள். இதனை பலர் மறுத்தாலும், இந்த இரு புகைப்படங்களையும் முழுமையாக ஆய்வு செய்து பொய் என யாராலும் இந்நேரம் வரையில் நிரூபிக்கவும் முடியவில்லை. அதுவரையில், இந்த மர்மமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

Also Read | "பேண்ட் வாத்தியத்துக்கு யார் காசு கொடுக்குறது?".. கோவத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. சோகத்தில் முடிந்த திருமணம்..!

Tags : #GRAVEYARD #GHOST OF WOMAN #CHILDBIRTH #GRAVEYARD PIC CAPTURES

மற்ற செய்திகள்