"இது ட்ரெய்லர் தான்".. மோத இருக்கும் இரண்டு பிரம்மாண்ட கேலக்சிகள்.. வைரலாகும் புகைப்படம்.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிரவைக்கும் உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டு கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்றாகும் மிக அரிய நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த புகைப்படம் பலரையும் ஈர்த்திருக்கிறது.
Also Read | "அடுத்து அதைத்தான் வாங்க போறேன்".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திக்கிட்ட ட்விட்டர்..!
விண்வெளி நம்ப முடியாத பல ஆச்சர்யங்களை கொண்டிருக்கிறது. நாம் பார்க்கும் வானில் ஏராளமான கேலக்சிகள் இருக்கின்றன. இவர் சில சமயங்களில் மிக அருகே வரும்போது அவை மோதலுக்குட்பட்டு ஒரே கேலக்சியாக மாறும். அப்போது அதீத ஈர்ப்பு விசையின் காரணமாக இரண்டு கேலக்சிகளும் ஒன்றிணைந்து முற்றிலும் வேறுபட்ட அளவில் புதிய கேலக்சி ஒன்று உருவாகும். கிட்டத்தட்ட பிரளயம் போன்ற இந்த நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஜெமினி தொலைநோக்கி
அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை, கனடா, பிரேசில், சிலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது. இதில் ஜெமினி நார்த் மற்றும் ஜெமினி சவுத் என இரண்டு தொலைநோக்கிகள் இருக்கின்றன. ஒன்று ஹவாயிலும் மற்றொன்று சிலியிலும் இருக்கிறது. அதிக சக்திவாய்ந்த இந்த தொலைநோக்கிகள் வட மற்றும் தெற்கு திசை விண்வெளியை ஆய்வு செய்துவருகின்றன.
அந்த வகையில் ஹவாயில் அமைந்திருக்கும் ஜெமினி நார்த் தொலைநோக்கி பல ஒளியாண்டுகள் தூரத்தில் இரண்டு கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று இணைய இருப்பதை படம் பிடித்திருக்கிறது. இந்த புகைப்படத்தினை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒன்றிணையும் கேலக்சிகள்
ஜெமினி நார்த் தொலைநோக்கி தற்போது NGC 4568 மற்றும் NGC 4567 ஆகிய இரண்டு கேலக்சிகளையும் ஆராய்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இரண்டு கேலக்சிகளுக்கு இடையேயான தூரம் 20 ஆயிரம் ஒளியாண்டுகள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 500 மில்லியன் ஆண்டுகளில் இந்த இரண்டு கேலக்சிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து புதிய கேலக்சியாக மாறும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும், இரண்டு விண்மீன் திரள்களும் ஒன்றோடொன்று இணைவதால், அவற்றின் எதிரெதிர் ஈர்ப்பு விசைகள் நட்சத்திர உருவாக்கத்தின் வெடிப்புகளைத் தூண்டும் மற்றும் இரு விண்மீன்களின் கட்டமைப்புகளையும் சிதைக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இது நம்முடைய பால்வெளி மண்டலம், ஆண்ட்ரோமேடா கேலக்சியுடன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் ஒன்றிணைவதற்கு ட்ரெய்லர் போல அமைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.