'நம்ம கல்யாணம் இங்க தான் நடந்துச்சு'... 'குழந்தைக்கும் ஞானஸ்நானம் இங்க தான்னு பிளான் பண்ணுனோமே'... தேம்பி தேம்பி அழுத கணவன்!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போன சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில், லண்டன்டெர்ரியை சேர்ந்தவர் சமந்தா வில்லிஸ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், பிரசவத்திற்காக Altnagelvin மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தா வில்லிஸ், பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஆனால் தனக்குப் பிறந்த குழந்தையின் பிஞ்சு முகத்தைக் கூட பார்க்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலேயே காலமானார். அவரது இறுதி ஊர்வலம் திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில் சமந்தா வில்லிஸின் சவப்பெட்டிக்குப் பின்னால் அந்த குழந்தை இருக்கும் புகட்டப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு Eviegrace என பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து சமந்தாவிற்கு மொத்த 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் சோகம் என்னவென்றால், சமந்தா வில்லிஸுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்ற தேவாலயத்தில் தான், திருமணம் நடைபெற்றது. அதே போலப் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதே தேவாலயத்தில் வைத்துத் தான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் எனக் கணவனும், மனைவியும் திட்டம் போட்டிருந்தார்கள்.
ஆனால் அது நிறைவேறாமலே போய் இறுதியில் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் சமந்தா வில்லிஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மற்ற செய்திகள்
