'அடுத்த அட்டாக்கிற்கு தயாராகும் 'TOBRFV வைரஸ்'... 'இந்த தடவ டார்கெட் யாரு'?... தீவிர முன்னெச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 06, 2020 01:19 PM

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், புதிதாக வைரஸ் ஒன்று பரவ உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

French agency warns ToBRFV virus threatening tomatoes, peppers

சீனா மட்டுமின்றி பல உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் குணப்படுத்த முடியாத தாவர வைரஸ் ஒன்று பிரான்ஸை நாட்டை தாக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடையே இது பரவாவிட்டாலும், அந்நாட்டில் விளையும் தக்காளி, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் பழம் உள்ளிட்ட தாவரங்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

'Tomato Brown Rugose Fruit Virus' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் முதல் முதலாக 2014ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது. இது தக்காளி, மிளகாய் உள்ளிட்டவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கினால் தாவரங்கள் அல்லது பழங்களின் விளைச்சல்களில் கடும் பாதிப்பு ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுக்கும்.

தாவரங்களுக்கு இடையே மிக எளிதில் பரவும் இந்த வைரஸ், வேர் முதல் இலை நுனி வரை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வைரஸால் தாக்கப்படும் தக்காளி, மிளகு மற்றும் மிளகாய் பழங்கள் சரியாக வளராது. மேலும் அவற்றின் இயற்கையான நிறம் மாறிவிடும் என்பதால் நுகர்வோர்களும் அவற்றை வாங்க மறுப்பார்கள். இதனால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

மேலும் இந்த வைரஸ் விதைகளின் வழியே கூட பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் மூலமாகவோ அல்லது தெரியாத இடங்களிலிருந்தோ விதைகளை வாங்க வேண்டாம் என பிரான்ஸ் விவசாயிகளை, அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Tags : #TOBRFV #THE TOMATO BROWN RUGOSE FRUIT VIRUS #FRENCH AGENCY #TOMATOES #PEPPERS