'அப்பா...! என்ன தூக்குங்கப்பா...' 'கட்டி அணைக்க முடியாமல் தவித்த மகள்...' கண்கலங்க செய்யும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவர் ஒருவர் தன் குழந்தையை தூக்க முடியாமல் வீட்டின் வாசலில் நின்று கண்ணாடிக்கு பின் தந்தையும் மகளும் தவிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போது அனைத்து மக்களையும் வீட்டிலே முடங்க செய்துள்ளது கொரோனா வைரஸ். ஆனால் மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி மக்களை மீட்டெடுத்து வருகின்றனர். பல மருத்துவர்கள் தங்களின் குடும்பத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாதென மருத்துவ கல்லூரி விடுதியிலும், மருத்துவமனைகளிலும் தங்கி வருகின்றனர்.
தங்களின் குடும்பங்களை சந்திக்கும் மருத்துவர்களின் பாசப்போராட்ட வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிலும் அதே போன்று அப்பாவை அணைக்க துடிக்கும் மகளின் பாச போராட்டம் அனைவரது கண்களையும் கலங்க செய்வதாக உள்ளது.
மருத்துவரான தன் அப்பாவை பார்த்ததும் கட்டி அணைக்க ஓடிவரும் மகள், ஆனால் அப்பா மகளை தொட கூட முடியாமல் வாசலின் கண்ணாடிக்கு வெளியே அமர்ந்துள்ளார்.
கதவை திறக்க சொல்லி குழந்தை தன் மழலை மொழியால் அம்மாவிடம் சிணுங்குகிறாள். மீண்டும் குழந்தை கண்ணாடிக்கதவை திறக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால் கதவை திறக்க முடியவில்லை என்பதால் கலங்கி அழுகிறது.
மகளின் முயற்சியை ரசிக்கும் மருத்துவர் தன் மகளுக்கு ஹாய் சொல்லி ப்ளைன் கிஸ் கொடுக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
This has made me real sad pic.twitter.com/mkY8GvuCmb
— Madhur (@ThePlacardGuy) April 15, 2020
