போட்ட 'ஆட்டம்' கொஞ்சம் நஞ்சமா...? சீனாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த 'ஆல்வின் சாவ்' யார்...? - பரபரப்பு பின்னணி...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இயங்கிவந்த சன்சிட்டி என்ற சீனக் குழுமத்தின் நிறுவனர் ஆல்வின்னை போலீசார் கைது செய்த சம்பவம் உலகளவில் திரும்பி பார்க்க செய்துள்ளது.
சீனாவின் மக்காவ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் சன்சிட்டி குழுமம். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வந்தவர் ஆல்வின் சாவ்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் போலத்தான் சீனாவின் மக்காவ் நகரம் சூதாட்ட நகரமாக இருக்கிறது. இங்கு பல நிழல் உலக தாத்தாக்களும், அவர்களுக்கு கீழ் இயங்கும் பல்வேறு கிரிமினல் குழுக்களும் இங்கு ரகசியமாக இயங்குகின்றன.
இந்த ஆட்கள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவுடன் தங்களுக்கு பிடிக்காதவர்களை, போட்டியாளர்களை போட்டுத் தள்ளுவது, மிரட்டுவது, முடக்குவது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டும் வருக்கின்றனர்.
அந்த நகரின் உயிர் சக்தியாக இருந்தவர் தான் சன்சிட்டி குழுமம் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வந்தவர் ஆல்வின் சாவ். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ள காரணத்தால் பல அரசியல்வாதிகள், கிரிமினல் கும்பல்கள் எல்லாம் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்காவ் நகரில் ஆல்வின் சாவ் நடந்தி வரும் இந்த மிகப் பெரிய சூதாட்ட கிளப்பில் பல்வேறு முக்கியமான சூதாட்டக்காரர்கள் வந்து சூதாடுவது வழக்கமாம். இவரை கைது செய்ததற்கு முக்கிய காரணமே குற்றவாளிகளை ஒருங்கிணைத்து கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டார் என்பதுதான்.
இவரும் கைது எதிரொலியாக சீனாவே அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ஆல்வின் சாவ்வின் ஹாங்காங் பங்குச் சந்தையில் சீன குழுமம் நிறுவன பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது