20க்கும் மேற்பட்ட கொலைகள்.. இந்தியா, நேபாளம்ன்னு ஆசியாவையே அலற விட்ட சீரியல் கில்லர் விடுதலை.. பீதியை கிளப்பும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 22, 2022 11:22 PM

வியட்நாமில் கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். இவரது தாய் வியட்நாமை சேர்ந்தவர் ஆவார்.

Charles Sobhraj serial killer release from nepal jail

இந்த நிலையில், தனது இளம் வயதில் பிரான்ஸ் சென்ற சார்லஸ், அந்த நாட்டின் குடியுரிமை பெற்று அங்கே வாழ தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் ஆரம்பத்தில் சிறு சிறு குற்றங்கள் செய்ய தொடங்கிய சார்லஸ் சோப்ராஜ், திருட்டு மோசடியில் ஈடுபட்டு அந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, 1970 காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணிக்க தொடங்கிய சார்லஸ் சோப்ராஜ், கொலைகளை செய்ய தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதுவும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கொல்ல தொடங்கிய சார்லஸ், தாய்லாந்தில் பெண் சுற்றுலா பயணியை கொன்றுள்ளார்.

இப்படி வரும் பல சுற்றுலா பயணிகளுடன் கனிவாக பேசி பின்னர் விஷம் கொடுத்தும் அடித்தும் கொலை செய்யும் சார்லஸ் அவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு பிற நாடுகளுக்கு சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி ஆசியாவின் பல இடங்களில் கொலையை அரங்கேற்றி வந்த சார்லஸ் சோப்ராஜ் குறித்த செய்தி மக்கள் மத்தியில் பீதியை உண்டு பண்ணி இருந்தது.

Charles Sobhraj serial killer release from nepal jail

இந்தியா, தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 30 கொலைகள் வரை சார்லஸ் செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதில் 12 கொலைகள் மட்டுமே தற்போது வரை நிரூபணம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் செய்த குற்றத்திற்காக இந்திய சிறையில் தண்டனை கைதியாய் 1976 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டிருந்தார். 1986 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிய சார்லஸை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Charles Sobhraj serial killer release from nepal jail

1997 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சிறைத் தண்டனை அனுபவித்த சார்லஸ் சோப்ராஜை நேபாள நாட்டில் நடந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், தற்போது அவருக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு நேபாள நாட்டின் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்னும் சில தினங்களில் அவர் விடுதலையாக உள்ளார். சார்லஸ் சோப்ராஜூக்கு தற்போது 78 வயதாகும் சூழலில், ஆசியாவை அலற வைத்த குற்றவாளி பற்றிய செய்தி, தற்போது பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.

Tags : #CHARLES SOBHRAJ

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Charles Sobhraj serial killer release from nepal jail | World News.