'இளம்பெண்ணுக்கு டான்சிலில் நடந்த ஆபரேஷன்'... 'மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் பேசிய வார்த்தை'... அதிர்ந்துபோன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்டான்சிலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக ஆஸ்திரேலிய பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்மணி கியி மெசியின். இவருக்கு நீண்ட நாட்களாக டான்சிலில் சிறிய பிரச்சனை இருந்துள்ளது. அதாவது டான்சிலில் ஒருவித அயற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து அதைச் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். இதையடுத்து கியி மெசியினுக்கு மயக்கமருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் மயக்கத்திலிருந்த கியி மெசியின், மயக்கம் தெளிந்து எழும்பிய நிலையில் தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் கியி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அவரை கொண்டு வந்த நிலையில் அவர் பேச முயன்றார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் அயர்லாந்து நாட்டுக்காரரைப் போல வார்த்தைகளை உச்சரிப்பதைப் பார்த்ததும் கியி மெசியின் மட்டுமல்லாது மருத்துவர்களும் அதிர்ந்து போனார்கள்.
இதற்கிடையே சிகிச்சை காரணமாகத் தான் அவ்வாறு பேசியதாக நினைத்த கியி மெசியின், சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பேசிய நிலையில் அவர்கள் உடனே நீ ஏன் இவ்வாறு பேசுகிறாய் என, அவருடைய உச்சரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கியி மெசியினுக்கு Foreign Accent Syndrome என்ற குறைபாடு ஏற்றிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
''ஆஸ்திரேலிய நாட்டில் பிறந்து இங்கேயே வளர்ந்த நான் இப்போது அயர்லாந்து நாட்டை சேர்ந்தவரை போலப் பேசி வருகிறேன். ஒவ்வொரு நாள் விடியும் போதும் எனது பழைய உச்சரிப்பு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் தான் கண் விழிக்கிறேன். ஆனால் அது கைகூடவில்லை'' என கியி மெசியின் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே முதன்முதலில் 1907வாக்கில் இந்த Foreign Accent Syndrome குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை வெறும் 100 வழக்குகள் மட்டுமே இந்த குறைபாட்டின் கீழ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.