'தூங்கும் போது கூட ஒரு கண்ணு திறந்து இருக்கும்'... 'பெட் ரூம்ல நான் பார்த்த அந்த காட்சி, ஐயோ'... ஒரே அறையில் சேர்ந்து வசித்த இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 06, 2021 11:57 AM

உயிர் பயத்தால் பல இரவுகள் நான் தூங்காமல் இருந்திருக்கிறேன் என அந்த இளைஞர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Auckland mall attacker Ahamed to know how to make a bomb, flatmate

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையைச் சேர்ந்த இளைஞர்  ஒருவர் நடத்திய கத்தி குத்தி தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரைச் சுட்டுக் கொன்றார்கள். தற்போது அந்த இளைஞர் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளது.

Auckland mall attacker Ahamed to know how to make a bomb, flatmate

அந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen. 32 வயது Ahamedவின் மொத்த தகவலையும் திரட்டிய தேசியப் பாதுகாப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், கடந்த 2017ம் ஆண்டு ஆக்லாந்தில் அவருடன் வசித்த இளைஞரைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.

Auckland mall attacker Ahamed to know how to make a bomb, flatmate

அதில், ''நான் கடந்த 2017ல் பல மாதங்கள் அவருடன் சேர்ந்து தங்கியிருந்தேன். சிரியாவுக்கு எப்படி பயணம் செய்வது மற்றும் அது தொடர்பாக உதவ ஆட்களை எனக்குத் தெரியுமா என அடிக்கடி Ahamed கேட்பார். மேலும் அவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு யாராவது முட்டுக்கட்டை போட்டால், சாலையில் இறங்கி யாரையாவது கத்தியால் குத்துவேன் என என்னிடம் வெளிப்படையாகக் கூறினார்.

ஒரு முறை Ahamed கட்டிலில் படுக்க வந்தார். அப்போது அந்த கட்டிலில் பெரிய கத்தி ஒன்று இருப்பதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். ஒரு வேளை என்னைக் கொன்று விடுவாரோ என்ற பயம் எனக்குத் தொற்றிக் கொண்டது. அன்றிலிருந்து தூங்கும்போது ஒரு கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தான் தூங்குவேன்.

Auckland mall attacker Ahamed to know how to make a bomb, flatmate

உயிர் பயம் காரணமாகப் பல நாட்கள் வீட்டிற்கு வராமல் வெளியிலேயே எனது நேரத்தைக் கழித்திருக்கிறேன் எனக் கூறியுள்ள அந்த இளைஞர், Ahamedவிற்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கும் தெரியும்'' என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Auckland mall attacker Ahamed to know how to make a bomb, flatmate | World News.