'அடப்பாவிகளா, டென்னிஸ் போட்டியை மறக்க வச்சிட்டீங்களே'... 'இளம்பெண்ணின் கையில் இருந்தது என்ன'?... இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Sep 06, 2021 09:22 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது விளையாட்டைப் பார்க்க வந்தவர்களை மறக்கடிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

US Open girl chugs beers to become the viral hero

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் Roberto Bautista-Agut மற்றும் Felix Auger-Aliassime இடையேயான போட்டி 5 செட்கள் வரை கிட்டதட்ட 4 மணிநேரம் நீடித்தது. இறுதியில் 6:3, 6:4, 4:6, 3:6, 6:3 என்ற செட் கணக்கில் Felix Auger-Aliassime வெற்றிபெற்றார். 3வது செட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் விளையாட்டைத் தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தார்.

US Open girl chugs beers to become the viral hero

அப்போது அந்த பெண்ணின் கையில் ஒரு பீர் கப் இருந்தது. இதனைக் கவனித்த கேமரா மேன், அந்த பெண்ணை பெரிய திரையில் காட்டினார். உடனே அந்த பெண் சந்தோச மிகுதியில் கையிலிருந்த பீரை ஒரே கல்பில் குடித்து ஆச்சரியப்படவைத்தார். பின்னர், மீண்டும் 5வது செட்டின் போது அதே பெண்ணை கேமராமேன் காட்டினார், ஆனால் அப்போது அவர் கையில் பீர் இல்லை.

US Open girl chugs beers to become the viral hero

இருப்பினும் தன்னை மீண்டும் பெரிய திரையில் காட்டுகிறார்கள் என்பதை அறிந்த அந்த பெண் அருகிலிருந்த நண்பரிடம் இருந்து கிளாஸ் பீரை வாங்கி  அதையும் ஒரே கல்பில் அடித்தார். இளம்பெண் இரண்டு முறை ஒரு கிளாஸ் பீரை குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Tags : #US OPEN

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. US Open girl chugs beers to become the viral hero | Sports News.