பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்.. மேரிலேண்ட் ஆளுநரான முதல் இந்திய பெண்.. யாருப்பா இவங்க?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 20, 2023 09:57 AM

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநராக முதல்முறை ஒரு இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Aruna miller first indian selected as Governor of Maryland

Also Read | "கார் எல்லாம் இல்ல".. மெட்ரோ ரயிலில் கல்யாணத்துக்கு போன மணப்பெண்.. வைரல் பின்னணி!!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். இவருடைய தந்தை கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் முறை அமெரிக்காவுக்கு ஒரு பொறியியல் மாணவராக சென்றிருக்கிறார். அதன்பிறகு அங்கேயே குடிபெயர திட்டமிட்ட அவர் 1972 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பயணமானார். அந்த சூழ்நிலையில் 7 வயதே ஆன அருணா முதல்முறை அமெரிக்காவுக்கு பயணித்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அதன்பிறகு அங்கேயே தனது கல்வியை முடித்திருக்கிறார் அருணா.

இதனிடையே அரசியலில் ஆர்வம் கொண்ட அருணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேரிலேண்ட் மாகாணத்திற்கான துணை நிலை ஆளுநர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டார். ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலை எதிர்கொண்ட அருணா அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, தற்போது மேரிலேண்டின் துணை நிலை ஆளுநராக அருணா பதவியேற்றிருக்கிறார். இதன் மூலம் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி இருக்கும் முதல் இந்தியர், முதல் கருப்பினத்தவர், முதல் பெண் ஆகிய பெருமைகளுக்கு இவர் சொந்தக்காரராகி இருக்கிறார்.

Aruna miller first indian selected as Governor of Maryland

பதவியேற்பு விழாவின் போது அருணா பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து உள்ளார். இதனையடுத்து பேசிய அவர் தனக்கு வாக்களித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,"நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மேரிலேண்ட் மாகாணம் என்னை பெருமையடைய செய்திருக்கிறது. தற்போது நாம் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளோம். அதிகாரம் வரலாற்றை உருவாக்குவதில்லை, மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. எனது இந்த வெற்றி நம் அனைவருக்குமானது" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேரிலேண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றுள்ள அருணா மில்லருக்கு பலரும் சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | காரில் எரிந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர்.. வேறோரு ஊரில் சிக்கிய திகிலூட்டும் பின்னணி!!

Tags : #ARUNA MILLER #GOVERNOR OF MARYLAND

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Aruna miller first indian selected as Governor of Maryland | World News.