3 வாரமா நடந்த 'ஆய்வு'.. 13 ஆம் நூற்றாண்டு'ல இருந்த இடம் பத்தி தெரிய வந்த உண்மை.. மிரண்டு போன ஆய்வாளர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த சில தினங்களாக தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஒரு குறிப்பிட்ட நகரத்தில் அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்த போது தெரிய வந்த விஷயம் கடும் வியப்பை உண்டு பண்ணி உள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷையரை அடுத்த Beverley என்னும் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமம் தொடர்பான தகவலை சேகரிப்பதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்த இடத்தில், கடந்த 13 ஆம் நூற்றாண்டில் என்ன இருந்தது என்பது பற்றி தெரிய வந்த தகவல், கடும் ஆச்சரியத்தை உண்டு பண்ணி உள்ளது. அதன் படி, மண்பாண்ட குவளைகள் மற்றும் ஜக்குகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், கடந்த 13 ஆம் நூற்றாண்டில், அந்த இடத்தில் Pub ஒன்று அங்கே இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதி உள்ளனர்.
அதே வேளையில், அங்கே ஆடுகள் மற்றும் மாடுகளின் எலும்புகளும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அங்கே கிடைத்த குவளைகள் 13 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை என கூறப்படும் நிலையில், ஆடு, மாடுகளின் எலும்புகளும் கிடைத்துள்ளதால், அந்த பகுதியில் Pub அல்லது பெரிய ஓட்டல் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும், 7 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு காலத்திற்கு இடைப்பட்ட கத்தி, உளி மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருள்களும் அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள், நெடு தூரம் நடந்து பயணம் செய்யும் சமயத்தில், இரவு நேரம் தங்கி உணவருந்தும் ஒரு சத்திரமாக கூட அது இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை பற்றி மேலும் தெரிவிக்கையில், அதற்கு இன்னும் ஆழமான வரலாறு இருக்கிறது என்றும், அதன் மேற்பரப்பு மட்டுமே இப்போது வெளிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.