"அடேங்கப்பா, 9 வயசுல இப்டி ஒரு திறமையா??".. இந்திய சிறுமியின் செயலை கண்டு வியந்து போன ஆப்பிள் CEO!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ, இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுமியை பாராட்டியது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | Miss TamilNadu : வென்று காட்டிய கூலி தொழிலாளி மகள்.. "சின்ன வயசுல இருந்தே விடாமுயற்சி".. உருகும் பெற்றோர்!!
இந்தியாவை சேர்ந்த 9 வயதான சிறுமி ஹனா முஹம்மது ரஃபீக். இவர் தற்போது துபாயில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ஐந்து வயது முதலே கோடிங் கற்று வரும் ஹனா, சமீபத்தில் ஐபோன்களுக்கான ஐஓஎஸ் செயலி ஒன்றை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், 'ஹனாஸ்' என்ற கதை சொல்லும் செயலி ஒன்றையும் சிறுமி ஹனா முகமது தற்போது உருவாக்கியுள்ளார். மேலும் இந்த செயலியில் பெற்றோர்களே கதைகளை பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், குழந்தைகளை தூங்க வைக்க வழிவகை செய்யும்.
இந்த செயலி தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஆன டிம் குக்கிற்கும் மெயில் ஒன்றை ஹனா அனுப்பி உள்ளார். மேலும் டீம் குக்கின் பதிலுக்காகவும் அவர் காத்திருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒன்பது வயதிலேயே ஐஓஎஸ் செயலி ஒன்றை உருவாக்கிய ஹனாவுக்கு மின்னஞ்சல் மூலமாக வாழ்த்து செய்தியையும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரியான டிம் குக் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய மெயிலில், "இவ்வளவு இளம் வயதில் நீங்கள் செய்த சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். இதனைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். எதிர்காலத்தில் நீங்கள் இன்னும் பல அற்புதமான விஷயங்களை செய்வீர்கள் " என டிம் குக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த செயலியை உருவாக்குவதற்காக சுமார் 10,000 க்கும் மேற்பட்ட கோடிங்கை எழுதியதாகவும் சிறுமி ஹனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்பது வயதிலேயே இப்படி ஒரு கோடிங் அறிவுடன் IOS செயலி ஒன்றையும் உருவாக்கிய சிறுமி ஹனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.