600 அடி ஆழ சுரங்கத்துல சிக்கிய 2 பேர்.. 9 நாளா உயிரை காப்பாத்திக்க செஞ்ச விஷயம்.. உள்ளே போன மீட்புப் வீரர்களே மிரண்டு போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியாவில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 2 பேரை 9 நாட்களுக்கு பிறகு மீட்புப் படையினர் மீட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | இவ்வளவு டன் தங்கமா?.. திருப்பதி ஏழுமலையானின் மொத்த சொத்து மதிப்பு.. தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை..!
தென்கொரியாவின் தென் கிழக்கு மாகாணமான Bonghwa-வில் உள்ள ஜிங்க் சுரங்கம் ஒன்றில் கடந்த 26 ஆம் தேதி பணிபுரிந்துகொண்டிருந்த 2 பேர் துரதிருஷ்டவசமாக உள்ளேயே சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. சுரங்கத்தின் உள்ளே இருவரும் சிக்கிக்கொண்டதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 620 அடி (190) ஆழத்தில் மாட்டிக்கொண்ட இருவரையும் மீட்க பல்வேறு வகைகளில் மீட்புப் படையினர் முயன்றிருக்கின்றனர்.
சுரங்க பாதையில் ஏற்பட்ட சரிவு காரணமாக பாதை மூடப்படவே, உள்ளே சிக்கிக்கொண்ட இருவரையும் மீட்க மிகவும் போராட வேண்டியிருந்ததாகவும் தெரிகிறது. 9 நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்ப்புப் படை வீரர் ஒருவர் உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார். உள்ளே இருவரும் நலமுடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த அவர், உயிர்பிழைக்க இருவரும் செய்தவற்றை அறிந்து திகைத்துப் போயிருக்கிறார்.
மீட்புப் படையினர் கொடுத்த தகவலின்படி 62 மற்றும் 56 வயதுகொண்ட இருவரும் 9 நாட்களாக தங்களிடத்தில் இருந்த இன்ஸ்டன்ட் காபி பவுடர்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தாக வெளியான செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மேலும், சுரங்கத்தின் உள்ளே கசியும் நீர்துளிகளையும் பருகியதாக சொல்லப்படுகிறது. அதனுடன், தங்குவதற்கு அருகில் இருந்த பொருட்களை கொண்டு டென்ட் ஒன்றையும் இருவரும் அமைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அந்த மீட்புப்படை அதிகாரி லிம் யூன்-சூக்," உடனடி காபி கலவை பொடியை அவர்களுடன் வைத்திருந்தார்கள் என்றும் அதை அவர்கள் உணவாக சாப்பிட்டு வந்ததாகவும் எங்களிடம் சொன்னார்கள். மேலும், உள்ளே கசியும் நீரை அவர்கள் பருகி தாகத்தை தணித்திருக்கிறார்கள்" என்றார்.
இந்நிலையில், உள்ளே சிக்கிக்கொண்ட இரண்டு பணியாளர்களையும் பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது மீட்புப்படை. இதனிடையே, இருவரும் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 600 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட இரண்டு பணியாளர்களை மீட்ட அதிகாரிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி நன்றி தெரிவித்திருக்கிறார்.
Also Read | "Warning-லாம் கிடையாது.. இத செஞ்சா உடனே அக்கவுண்டை தூக்கிடுவோம்".. எலான் மஸ்க் அடுத்த அதிரடி..