1 லட்சம் அடி உயரத்துல இருந்து பூமியை பார்க்கலாம்.. ஸ்பெஷல் ஸ்பேஸ் டூர்.. TICKET PRICE எவ்வளவு?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கான டிக்கெட் விற்பனையை துவங்கியுள்ளது.

பொதுவாகவே நம்முடைய அன்றாட வேலைகளில் இருந்து சற்று விடுபட்டு, ஒரு சுற்றுலா சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரிடத்திலும் இருக்கும். டிராஃபிக் இரைச்சல்கள், அலுவலக பணி என அனைத்தில் இருந்தும் விடுபட்டு புதிய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என தோன்றாத நபர்களே இருக்க முடியாது. அதுவும் விண்வெளிக்கே சுற்றுலா சென்றால்? அதுவும் 1 லட்சம் அடி உயரத்திலிருந்து பூமியை காணும் வகையில் அந்த சுற்றுலா அமைந்தால்? உண்மைதான். அதற்கான வாய்ப்பைத்தான் அளித்திருக்கிறது அமெரிக்க நிறுவனம் ஒன்று.
விண்வெளி சுற்றுலா
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ் என்ற நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லும் சுற்றுலா சேவையை துவங்க இருக்கிறது. பைலட் உட்பட 9 பேர் பயணிக்கக்கூடிய பிரம்மாண்ட பலூன் வடிவிலான விண்கலத்தில் இந்த சுற்றுலா நிகழ இருக்கிறது. பூமியிலிருந்து சுமார் ஒரு லட்சம் அடி உயரத்தில் இந்த ராட்சச பலூன் நிலைநிறுத்தப்பட்டு பூமியை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து விண்வெளிக்கு செல்வதற்கும் பூமிக்கு திரும்புவதற்கும் 2 மணி நேரங்கள் ஆகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்போது?
அமெரிக்காவின் புகழ்பெற்ற கென்னடி விண்வெளி விண்வெளி மையத்தில் இருந்து இந்த பலூன்கள் 2024 ஆம் ஆண்டுவாக்கில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 125,000 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் இந்த பலூன்கள் மணிக்கு 12 மைல் வேகத்தில் விண்வெளி நோக்கி பயணிக்கும் எனவும் இதில் பயணிப்பவர்கள் இதற்காக சிறப்பு பயிற்சிகள் எதுவும் எடுக்க தேவையில்லை எனவும் இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டில் 25 விண்வெளி சுற்றுலாக்களை திட்டமிட்டிருக்கிறது ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ் நிறுவனம். அதற்கான டிக்கெட்கள் தான் இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
