செல்போன் டூ... "ஸ்ட்ரெஸ், இன்சோம்னியா, பிரெயின் ட்யூமர்"... எச்சரிக்கும் மருத்துவர்கள்...! இளம் தலைமுறையினருக்கான ரெட் அலர்ட்...!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Suriyaraj | Jan 20, 2020 10:18 PM

நாம் உபயோகிக்கும் செல்போன்களிலிருந்து ரேடியேஷன் எவ்வளவு குறைவாக வந்தாலும் மூளை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் ராகவன் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

Excessive use of the cell phone can cause brain damage

மதுரையைச் சேர்நத் நரம்பியல் துறை மருத்துவர், டாக்டர் ராகவன் இதுகுறித்து behindwood-க்கு அளித்த பேட்டியில், தொற்றுகள் மற்றும் ரத்தம் உறைவதால் ஏற்படக்கூடிய வாதங்கள் தவிர மூளை பாதிப்புக்கு மன உளைச்சல் முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறார்.

பெரும்பாலானோரின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஸ்மார்ட் போன்களே என குறிப்பிடும் அவர், செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கமாக கூறியுள்ளார்.

தற்போதைய நவீன காலச் சூழலில், சமூக வலைதளங்கள் இளைஞர்களின் வாழ்வில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. இளம் சமுதாயத்தினர் தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போன்களை பார்ப்பதிலேயே செலவு செய்கின்றனர். செல்போன்களில் அதிகமாக படங்களை பார்ப்பது, பல்வேறு ஆப்களை உபயோகிப்பது, சாட்டிங் செய்வது போன்றவை பெரும்பாலும் இளைஞர்களை செல்போன்களுக்கு அடிமையாகவே ஆக்கிவிட்டது. 

இதனால் 'இன்சோம்னியா' போன்ற தூக்கமின்மை வியாதிகள் ஏற்பட்டு மனஉளைச்சலுக்கு இட்டுச் செல்வதாக டாக்டர் ராகவன் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், செல்போன்களில் இருந்து வரும் ரேடியேஷன் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது மூளையை பாதிக்கக் கூடும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

செல்போன்களிலிருந்து வரும் மைக்ரோ மின்காந்த அலைகள், மூளையின் டெம்பரல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் வலிப்புநோய், மூளைக்கட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கும் டாக்டர் ராகவன், செல்போன்களை மணிக்கணக்கில் உபயோகிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்.

செல்போன்களை அதிக நேரம் காதில் வைத்து பேசும்போது ஏற்படும் வெப்பம் மூளைக் கட்டி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற விளைவுகளைத் தவிர்க்க ஹெட்போன்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்துகிறார். மேலும் செல்போன்களில் இருந்து வரும் அல்ட்ரா வைலட் லைட், பீனியல் சுரப்பியில் பாதிப்பை ஏற்படுத்தி கண்பார்வை பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தூக்கம் வர உதவக்கூடிய மேலடோனியன் சுரப்பியையும் பாதிப்பதால் தூக்கமின்மை பாதிப்புக்கு ஆளாக்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

இது தவிர, செல்போன் உபயோகிப்பதில் அடிமையாக மாறுவது வேறுவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார். குழந்தைகள் செல்போன்களை அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குழந்தைகளின் உடல் ரீதியிலான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும், எதிர்கால தலைமுறையினருக்கு ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், பசியின்மை, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமை போன்ற பிரச்னைகளுக்கு குழந்தைகள் ஆளாகக் கூடும் என்றும்  எச்சரிக்கிறார்.

செல்போன்களை அத்தியாவசியத்துக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு அவை ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து விலகி இருப்பது தற்போது காலத்தின் கட்டாயமாகி விட்டதாகவும் டாக்டர் ராகவன் இளம் தலைமுறையினருக்கு அறிவுறுத்துகிறார்.

Dr.K.Raghavan, MD(Paed), MRCPCH, FRCPCH, CCST(UK), FELLOWSHIP NICU Paediatric Neurologist, Developmental & Behavioural Specialist

Kenmax Integrated Special School (KISS)

Contact Number: +91-9444444317

ADDRESS: No.17, Mellur, Vinayaga Nagar, KK Nagar , Madurai - 625020, Tamil Nadu, India

Website: http://kenmaxschool.com/

Tags : #CELL PHONE #CAUSE #BRAINDAMAGE #DOCTORS WARNING