முகத்த 'அதுக்கு' நேரா வச்சு 'அப்படி' பண்ணினா மட்டும் தான்... 'ஆபீஸ் உள்ள என்ட்ரி ஆக முடியும்...' 'இல்லனா வெளிய நிற்க வேண்டியது தான்...' - பிரமிக்க வைக்கும் 'AI' டெக்னாலஜி...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கேனான் நிறுவனம் பிரமிக்க வைக்கும் ஒரு அட்டகாசமான புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்க் நகரத்தில் உள்ள பிரபல நிறுவனமான கேனான் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் சிரிப்பை ஸ்கேன் செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் ஒன்று அறிமுகமாகி உள்ளது.
ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையும்போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே கதவு திறந்து உள்ளே நுழைய அனுமதிக்கும். சிரிக்காதவர்கள் நாள் முழுவதும் வெளியே நிற்க வேண்டியது தான்.
பணி செய்யும் ஒவ்வொரு ஊழியரும் வேலை நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
இது விரைவில் உலகம் முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.