'ஹ்ம்ம்... என்னடா சரக்குல சுக்குகாபி வாசனை வருது...' 'ஏதாவது நியூ ஃப்ளேவரா இருக்கும்...' ப்ளாக்ல மது வாங்கின 'குடிமகன்'களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 03, 2020 12:48 PM

டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டதால் ‘குடிமகன்கள்’ மது கிடைக்காமல் திக்குமுக்காடி வருகின்றனர். இதை பயன்படுத்தி திருட்டுத்தனமாக மது விற்பவர்கள் குவார்ட்டர் பாட்டிலில் சுக்குக்காப்பியை அடைத்து ரூ.300க்கு விற்ற சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Wine merchants who sell dried ginger coffee instead of wine

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ‘குடிமகன்கள்’ குடிக்க மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். நண்பர்களுக்கு போன் போட்டு, ‘பிளாக்ல சரக்கு கிடைக்குமா... ரேட் எல்லாம் ஒரு பிரச்சனை இல்ல’ என்று கேட்டு வருகின்றனர்.

தடை உத்தரவை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் மது வாங்கி வந்து, பலர் முறைகேடாக விற்று வருகின்றனர். இவர்கள் புதர்களில் மறைந்தபடியும், ஊர் ஒதுக்குப்புறமாகவும் வைத்து விற்று வருகின்றனர். கேரளாவில் டாக்டர்கள் பரிந்துரையின்படி மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த நடைமுறை இல்லாததால் ‘குடிமகன்கள்’ தவித்து வந்தனர்.இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் மது கிடைக்கிறது என தகவல் கிடைக்க, விற்கும் இடத்தில் சற்று நேரத்தில் வந்து குவிந்தனர்.

அதீத மகிழ்ச்சியுடன் மது பிரியர்கள் ஆர்வமுடன் பாட்டில்களை வாங்கிச் சென்றனர். குவார்ட்டர்  ரூ.300 என கூறிய நிலையில், ‘‘கிடைக்கிறதே பெரிய விஷயம்’’ என பணத்தை அள்ளி வீசிவிட்டு பாட்டிலை வாங்கி லுங்கியில் சொருகி உள்ளனர்.‘‘போலீஸ் வருதுய்யா, வாங்கிட்டு  எஸ்கேப் ஆயிடுங்க...’’ என சொல்லிவிட்டு விற்பனை செய்த இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவாகி உள்ளனர். வாங்கிய ‘குடிமகன்களும் ஆள்நடமாட்டம் இல்லாத புதர்களுக்கு சென்று பாட்டில்களை திறந்து குடித்துள்ளனர்.

அப்போது பாட்டிலில் இருந்து சுக்குக்காபி வாசனை வந்துள்ளது. முதலில் புதிய ஃபிளேவராக இருக்கும் என்று நினைத்து குடித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாட்டிலில் இருந்தது மது அல்ல, சுக்கு காபி என்று உறுதி செய்தனர். ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் சுக்கு காபியை 300 ரூபாய்க்கு ஏமாந்து விட்டோமே என குடிமகன்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

Tags : #COFFEE #ALCHOCOL