'சென்னை சாலையோரம் கிடந்த ஆண்குழந்தை...' மீட்கப்பட்ட குழந்தைக்கு பெயர் வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை முத்தியால்பேட்டையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு, அக்குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என அழகான தமிழ் பெயர் சூட்டியுள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை முத்தியால்பேட்டை சாலை ஓரம் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு, எடை குறைந்த நிலையில் இருந்த ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தையை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பகுதியில் சேர்த்து, குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பால் அளித்து கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராகி 2 கி.கி எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் சுட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 'சென்னை முத்தியால்பேட்டையில் இருந்து ஆண் குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இன்று நான் அக்குழந்தைக்கு "முத்தமிழ்ச் செல்வன்" என்று பெயர் சூட்டினேன். மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர்.சரோஜா அவர்கள் முன்னிலையில் அக்குழந்தையை சமூக நலத் துறையிடம் ஒப்படைத்தார் குழந்தையை மீட்டு காப்பாற்றிய காவல்துறை குழுவினர் ,108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் செவிலியர் குழுவினரை நான் பாராட்டினார். சிறுவனை இறைவன் ஆசீர்வதிப்பாராக...!' என பதிவிட்டுள்ளார்.
A new born, abandoned baby boy, malnourished, under weight with septic shock was rescued by Police at #Muthiyalpet & hospitalised @gmcstanley1. The baby was fed from the breast milk bank, improved well at 2kg now. Today, I named him ‘Muthamil Selvan’. pic.twitter.com/6u3NueaDCT
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) July 28, 2020