'ஸ்கூல் டி.சி.யில் இனி 'சாதி' குறிப்பிடத் தேவையில்லை'... பள்ளி கல்வித்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 14, 2019 06:02 PM

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் , இனி சாதியை குறிப்பிட தேவையில்லை என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN Government order no need to mention caste in transfer certificate

பொதுவாக தங்களது படிப்பினை முடித்தப் பிறகு, மாணவர்களுக்கு பள்ளிகளில், மாற்றிச் சான்றிதழ் (Transfer Certificate) வழங்கப்படுவ்து வழக்கம். அதில் மாணவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கும் மாற்றுச் சான்றிதழில், சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை செவ்வாய் கிழமையன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வருவாய்த் துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மாற்றுச் சான்றிதழில் ‘வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்.

சாதி தொடர்பான கேள்வியை  நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால், அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச் சான்றிதழை கொடுக்க வேண்டும்' என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags : #DPI #TRANFERCERTIFICATE