‘தொட்டா ஷாக் அடிக்கும்!’.. ‘இந்த செருப்ப மட்டும் கால்ல போட்டுக்கங்க’.. ‘வேற லெவல்’ கண்டுபிடிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 11, 2020 04:13 PM

தஞ்சாவூரைச் சேர்ந்த பி.இ எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் இளைஞர் அமிர்த கணேஷ். இவர் விவசாயம், ராணுவம், மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது உண்டாகும் விஷவாயு தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் கருவி உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

Tn engineers invented women safety protect slipper

தற்போது பெண்களின் தற்காப்புக்காக இவர் சில மாணவிகளை உதவிக்கு வைத்துக்கொண்டு ஒரு புதிய ரக செருப்பினை உருவாக்கியுள்ளார். இதற்கென ஒயர்லெஸ் ரிசீவர், சிறிய அளவிலான பேட்டரி, எலக்ட்ரோடு ஆகியவற்றைக் கொண்டு சிறிய அளவில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியதோடு அதனை செருப்பின் அடிபாகத்தில் பொருத்தினார். இந்த செருப்பை அணிந்துகொண்டு செல்லும் பெண்கள் தூக்கப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ அவர்களின் உடலில் உண்டாகும் அதிர்வை வைத்து அலாரம் சத்தமிடும். 100 மீட்டர் வரை இந்த சத்தம் கேட்குமாம். அதோடு அந்த செருப்பை அந்த நேரத்தில் தன்னை தாக்குபவர் மீது வைத்தாலோ அல்லது அவராகவே வந்து செருப்பைத் தொட்டாலோ ஷாக் அடித்துவிடும்.

ஆபத்து காலத்தில் பெண்கள் தங்களை காத்துக்கொள்ள செருப்பைத்தான் கையில் எடுப்பார்கள். அவ்வகையில் அதே செருப்புக்கு இப்போது கூடுதல் பலம் சேர்த்துள்ள இந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் 5 ஜோடி செருப்புகளை அமிர்த கணேஷின் குழுவினர் உருவாக்கியுள்ளனர். தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கை கடந்து சென்றபோது தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியாமல் தவித்த போதுதான் இப்படி ஒரு செருப்பின் அவசியத்தை அமிர்த கணேஷ் கூறியதாக அவரது குழுவில் பணியாற்றிய மாணவிகள் கூறுகின்றனர்.

Tags : #SLIPPER #INVENTION