'கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்க...' 'மாஸ்க், கிளவுஸ், ட்ரெஸ்ன்னு நெறைய ஆர்டர் குவியுது...' களமிறங்கியுள்ள திருப்பூர் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 08, 2020 11:08 AM

கொரோனாவை தடுப்பதற்காக திருப்பூர் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் தடுப்பு உடைகளை தயாரிக்க துவங்கியுள்ளது.

Tirupur Technical Textiles Corona Precious Clothing Products

சர்வதேச சந்தையில் போட்டி அதிகரிப்பால், சாதாரண வகை ஆடை தயாரிப்பில், நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் மிகவும் குறைவாக கிடைக்கிறது. வியாபாரத்தை உயர்த்தும் வகையில், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பில் ஈடுபடுவது அவசியம் என்பதை திருப்பூர் தொழில்துறையினர் உணர்ந்துள்ளனர்.கொரோனா வைரஸ், உலகளாவிய நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை, கையுறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் அணிவதற்காக முக கவசங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன.மேம்பட்ட ஆடை உற்பத்தி தொழில்நுட்பங்கள் கைவசம் வைத்திருப்பதால், அவற்றை உபயோகித்து வைரஸ் தடுப்புக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாரிக்க தயாரிப்பில் திருப்பூர் களமிறங்கியுள்ளது.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இன்னும் பலபகுதிகளில் உள்ள நிறுவனங்கள் வழங்கிய ஆர்டர் அடிப்படையில், திருப்பூர் நிறுவனங்கள், முக கவசங்கள், கிருமி தொற்று தடுப்பு முழு கவச ஆடை, கையுறை போன்ற டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் ரகங்களை அதிகளவில் தயாரித்து வருகின்றன.விடுதிகளில், தங்க வைக்கப்பட்டுள்ள, தொழிலாளர்களை கொண்டு, வைரஸ் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து உற்பத்தி பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் தினம் மூவாயிரம் அளவில் முக கவசம், கையுறை, ஆயிரத்து ஐநூறு முதல் ரெண்டாயிரம் எண்ணிக்கையில், முழு கவச உடை தயாரிக்கின்றன. உற்பத்தி செய்யப்படும் கிருமி தொற்று தடுப்பு பொருட்கள், முறையாக பேக்கிங் செய்யப்பட்டு, ஆர்டர் வழங்கியுள்ள நிறுவனங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், தேவை இன்னும் அதிகமாக இருப்பதால், முக கவசம், கையுறை, கவச உடை கோடிக்கணக்கில் திருப்பூருக்கு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #TEXTILES