'சாயங்காலம் அவன் அக்கா கூட தான் விளையாடிட்டு இருந்தான்...!' ' தொட்டி உடைஞ்சு இருக்குறத லேட்டா தான் பார்த்தோம்...' கலங்க வைத்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 14, 2020 12:18 PM

ஆவடியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது மாயமான 6 வயது சிறுவன் இறந்த நிலையில் கழிவு நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The six year old boy who fell into the open sewer tank

சென்னை, ஆவடி காந்திநகர் அன்பழகன் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி,வள்ளி தம்பதியினர். இவர்களது 6 வயது குழந்தை சுமூகன் மாலை 5 மணியளவில் தெருவில் தனது அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது மாயமானதாக ஆவடி காவல் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.

காந்தி நகர் பகுதியில் உள்ள அன்பழகன் நகர் அதனை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சுமார் 2 மணிநேரம் ஆய்வுசெய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்காததால், தனிப்படையினர் குழந்தையின் வீட்டின் அருகே சென்று ஆய்வை தொடர்ந்தனர்..

அப்போது அங்கே ஒரு கழிவு நீர் தொட்டியில் உடைப்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு சோதனை நடத்தியபோது குழந்தை சுமூகன் மிதப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டு தொட்டியில் உள்ள கழிவுநீரை வெளியே எடுத்தனர். குழந்தையை ஏப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற இடத்தில் தனிப்படை காவல்துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறங்கி குழந்தையை மீட்டனர்.

ஆனால் குழந்தை குழிக்குள் விழுந்து பலமணி நேரம் ஆகியிருந்தால், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்ததற்கான காரணம் அந்த பகுதியில் சுமார் 12 வீடுகளுக்கு மேல் வாடகை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர் கழிவுநீர் தொட்டியை முறையாக பராமரிக்காமல், கழிவுநீர் தொட்டியில் மூடிகள் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : ##SHOCKING