‘45 நாட்களில் இரண்டடுக்கு மாடி மருத்துவமனை’!.. ப்ரீகாஸ்ட் கான்கீரிட் தொழில்நுட்பத்தில் கட்டி ‘உலக சாதனை’ படைத்த TEEMAGE நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 06, 2021 02:48 PM

டீமேஜ் (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 45 நாட்களில் இரண்டடுக்கு மாடி மருத்துவமனையைக் கட்டி உலக சாதனை படைத்துள்ளது.

Teemage World Record Citation ceremony

கடந்த 2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட டீமேஜ் (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாகும். தற்பொழுது இந்த நிறுவனத்தில் 1607 பணியாளர்கள் பணிபுரிகின்றார்கள். இந்தியா முழுவதும் கடந்த 14 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த பல்வேறு கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. PRECAST தொழில் நுட்பத்தில் இந்திய அளவில் முதன்மையான நிறுவனமாக டீமேஜ் விளங்குகிறது. 14 வருட உழைப்பின் வெளிப்பாடாக இன்று ஓர் உலக சாதனையை டீமேஜ் நிறுவனம் படைத்துள்ளது.

Teemage World Record Citation ceremony

இதுவரை யாரும் செய்திராத வகையில், 45 நாட்களில் 69,200.0056 சதுர அடியில் 401 படுக்கையறை வசதிகள் கொண்ட இரண்டடுக்கு மாடி மருத்துவமனைக் கட்டிடத்தை PRECAST தொழில் நுட்பத்தில் 18-05-2021 அன்று காலை துவங்கி 01-07-2021 ஆம் தேதியில் நிறைவு செய்துள்ளது. இது “மிகக் குறைந்த கால அவகாசத்தில் ப்ரீகாஸ்ட் கான்கீரிட் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனை” (LARGEST HOSPITAL CONSTRUCTED BY PRECAST CONCRETE TECHNOLOGY IN SHORTEST PERIOD) எனும் உலக சாதனையைப் படைத்துள்ளது. இதனை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளன.

Teemage World Record Citation ceremony

அதற்கான உலக சாதனை சான்றளிப்பு விழா இன்று (06-07-2021) மாலை 4:30 மணியளவில் அவினாசி, ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி CBSE பள்ளி அரங்கில் நடைபெற்றது. விழாவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (United States LLC) உலக சாதனை நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் Dr. திரு. ஜவகர் கார்த்திகேயன் அவர்களும், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (United Arab Emirates) உலக சாதனை நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் Dr. திரு. A.K.செந்தில் குமார் அவர்களும், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் திரு. P.ஜெகநாதன் அவர்களும், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கவிஞர் திரு. L.ராஜ்கிருஷ்ணா அவர்களும் கலந்து கொண்டு, டீமேஜ் (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. N.K.நந்தகோபால் அவர்களிடம் உலக சாதனை சான்றிதழ்களை வழங்கினர். உடன் உலக சாதனை நிகழ்வின் திட்ட இயக்குநர் திரு. A.பிரனேஷ்பாபு அவர்களும் இணைந்து பெற்றுக்கொண்டார். மேலும் விழாவின் சிறப்பு விருந்தினராக Tamil Nadu State Council for Science and Technology அமைப்பின் Vice President Dr.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Teemage World Record Citation ceremony

மருத்துவ சேவை வழங்க தமிழக அரசிற்கு மருத்துவமனை கட்டிடத்தை நன்கொடையாக கட்டித்தர ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் முடிவு செய்து, அதை அமைக்கும் பொறுப்பினை டீமேஜ் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் கேட்டிருந்தபடி மருத்துவமனையை கட்டி கடந்த ஜூலை 2-ம் தேதி ஒப்படைக்கப்பட்டு விட்டது. இன்னும் சில தினங்களில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை தமிழக அரசிடம் ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் வழங்க இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #TEEMAGE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Teemage World Record Citation ceremony | Tamil Nadu News.