'சரக்கு வாங்க டோக்கன்...' 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர்...' 'என்னென்ன கலர் எந்தெந்த நாளைக்கு...?' மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 15, 2020 04:51 PM

டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் மது வாங்க டோக்கன்கள் வழங்கப் படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது

tasmac announced that it will be offering tokens to buy wine

மதுவாங்க ஞாயிறு முதல் சனி வரை கிழமை வாரியாக பல்வேறு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மதுவங்கிக் கொள்ளலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும்.

இதுல ஞாயிற்றுக் கிழமை அன்று ஆரஞ்சு நிற டோக்கனும், திங்கள் கிழமை அன்று பச்சை நிற டோக்கனும், செவ்வாய் கிழமை அன்று சிவப்பு நிற டோக்கனும்,  புதன்கிழமை அன்று நீலநிற டோக்கனும், வியாழக்கிழமை அன்று ஊதா நிற டோக்கனும், வெள்ளிக்கிழமை அன்று பிரவுன் நிற டோக்கனும் மற்றும் சனிக்கிழமை அன்று கருப்பு நிற டோக்கனும் வழங்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை கேட்டதும் மதுப் பிரியர்கள் பயங்கர கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags : #TOKEN #COLOR