தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் மரணம்.. தமிழ் உலகிற்கு பேரிழப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசியல்வாதியும் தமிழ் அறிஞருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நெல்லை கண்ணன் 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பிறந்தவர். இந்திய தேசிய காங்கிரசஸ் கட்சியில் சிறு வயது முதலே பேச்சாளராக செயலாற்றியவர். ஆன்மீக சொற்பொழிவு, தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவராக தமிழ் மக்களால் அறியப்பட்டவர். இவருடைய தமிழ் அறிவு காரணமாக தமிழ் கடல் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்.
1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கட்சி சாராமல் 2006 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தவர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசியதற்காக 2020ல் கைது செய்யப்பட்டவர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தனது 79வது வயதில் இன்று நெல்லை கண்ணன் காலமானார். இவருக்கு சுரேஷ் கண்ணன் மற்றும் ஆறுமுகம் என இரு மகன்கள் உள்ளனர்.