திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..? இறப்பில் சந்தேகம் எழுப்பிய தாய்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான 6 மாதங்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் தொடர்பான செய்தி, தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகள் ஜெபஸ்லீ. இவருக்கும் மானாமதுரை அருகே உள்ள மேலபசலையை சேர்ந்த திரவியம் மகனான ஜெகதீஷ் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமணத்திற்கு பிறகு ஜெபஸ்லீ மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் மானாமதுரையில் உள்ள பர்மா காலனியில் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் ஜெகதீஷ் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனிடையே சில ஒரு சில தினங்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சனை காரணமாக ஜெபஸ்லீ விபரீத முடிவு எடுத்து உயிரிழந்ததாகவும் ஜெகதீஷ் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஜெபஸ்லீ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவரது உடல் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெபஸ்லீ உறவினர்கள் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கூறி மானாமதுரை அரசு மருத்துவமனையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில், ஜெபஸ்லீ கணவரான ஜெகதீஷ் மீதும் அவர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜெபஸ்லீ உறவினர்களை போலீசாரும் வந்து சமரசம் செய்ய முயன்றனர்.
மேலும், ஜெபஸ்லீயின் தாயார் பேசும்போது அவரது விபரீத முடிவுக்கு அவர் மட்டுமே காரணம் என நம்பியதாகவும், பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தால் அவரது உடலில் காயம் இருப்பதை பார்த்ததாகவும், கைவளையல்கள் உடைந்து கிடந்ததாகவும், எனவே அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அவரது தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.