'சிறையில் மரணமடைந்த ராம்குமார்'.. 4 வருடங்களுக்கு பிறகு.. சுவாதி கொலை வழக்கு தொடர்பான புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவையே உலுக்கிய கொலை வழக்குகளில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கும் ஒன்று.

இந்த கொலை வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மின்சார வயரைக் கடித்து அவர் மரணம் அடைந்தார் என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
தற்போது இந்த சம்பவத்துக்கு பின்னர், 4 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 30-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியுள்ளது.
புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து உள்ளிட்டோருக்கு இந்த சம்மனை அனுப்புவதற்கு, மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
