'ஒரு நாள் ஒரு கொலை...' 'அவர் பேசிய தமிழை பார்த்து மிரண்டுட்டோம்...' 'பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியும்...' 'கல்' சைக்கோ வாலிபரின் கதை... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே கஞ்சா அடிப்பதற்காக மூன்று கொலை செய்த சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 1ம் தேதி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவரும், 2ம் தேதி திருவாக்கவுண்டனூர் பைபாஸில் வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரும், 3ம் தேதி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அங்கமுத்து (60) என்பவரும் ஒரே முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சேலம் மாவட்ட போலீசார் மூன்று கொலைகளை பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கொலை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 கொலைகளையும் ஒரே நபர் என உறுதி செய்யப்பட்டு சந்தேகத்திற்குரிய ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி வீடியோவில் இருந்தவரும் இந்த வாலிபரும் ஒருவர் தான் என்பதை சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படத்தை ஆய்வுக்காக அனுப்பி உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து ஆண்டிசாமியை விசாரணை நடத்திய போலீசார் சில திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தேரியூர் என்ற கிராமத்தை சேர்ந்த மார்க்கண்டன்-நாகம்மாள் ஆகியோரின் மகன் ஆண்டிசாமி (19). இவர் பத்தாம் வகுப்பில் 428 மதிப்பெண் பெற்று ஒரு நல்ல படிக்கும் மகனாகவே இருந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத ஆண்டிசாமி பெற்றோர் உடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவருடைய தந்தை திடீரென வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவரால் இவர்களை தனியே விட்டு சென்றதால் மனரீதியாகவும், பொருளாதார அளவிலும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
வீட்டில் உள்ள கவலைகளை மறக்க நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற தொடங்கி கஞ்சா போதைக்கு பழகியுள்ளார். போதைக்கு அடிமையான ஆண்டிசாமி காசு தராததால் தன் அம்மாவையும் ஒரு சில நேரங்களில் தாக்கி, வீட்டிற்கும் தீ வைத்துள்ளார். தன் மகன் போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வர ஏர்வாடி தர்காவிற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அவரது தாய்.
அங்கிருந்து தப்பித்து சென்ற ஆண்டிசாமி தெரு தெருவாக சுற்றி பிச்சை எடுத்தும், பொதுமக்களிடம் இருந்து திருடிய பணத்தில் கஞ்சா அடித்துள்ளார். வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தபோது கஞ்சா குடிக்க பணம் இல்லாததால் பிச்சைக்காரர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார்.
சேலம் வந்த இவர் கஞ்சா அடிக்க பணத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒரு கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் பேசிய தூய தமிழ் போலீசாரையே ஆச்சரியம் அடைய செய்துள்ளது. பெற்றோர்களின் சரியான பராமரிப்பு இல்லாததாலும், தவறான நண்பர்களின் சேர்க்கையாலும் நன்றாக படிக்கும் ஒரு பையன் கொலைக்காரனாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.
