'நான் உனக்கு கை கொடுக்கணுமே!'.. 'சிறுமியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்.. நெகிழவைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 05, 2019 03:10 PM
பொது நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு கைகொடுக்க ஏங்கிய சிறுமியை அபுதாபி இளவரசர் கவனிக்காததால், சிறுமி ஏமார்ந்துபோனார்.

இளவரசர் சேக் மொகமது பின் ஸாயத், அபுதாபி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது வரிசையாக அனைத்து சிறுமிகளுக்கும் கைகொடுத்துக் கொண்டே வந்தார். ஆனால் அவருக்கு கைகொடுப்பதற்காகவே இடமிருந்து வலம் சென்ற சிறுமி அவருக்கு கைகொடுத்துள்ளார்.
எனினும் அதைக் கவனிக்கத் தவறிவிட்டார் இளவரசர். பின்னர் இந்த வீடியோ இணையதளங்களில் வலம் வந்ததை அடுத்து, அந்த சின்னஞ்சிறிய சிறுமியின் வாடிய முகத்தைக் கண்டு பலரும் வாடியதைப் போல் அபுதாபி இளவரசரும் ஒரு கணம் உருகித்தான் போய்விட்டார்.
— عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019
உடனே ஆயிஷா என்கிற அந்த சிறுமியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து சிறுமியை சந்தித்த இளவரசர் சிறுமியுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, தனக்கு கொடுத்த நினைத்த சிறுமியின் கைகளையே நீண்ட நேரம் பற்றியிருந்தபடி தனது பாசத்தை பொழிந்து சிறுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
