"ஒழுக்கமே தேவையில்லைனு விதைக்குறாங்க. நம் சந்ததிகளை காப்பாற்ற வேண்டும்" - பகாசூரன் குறித்து H.ராஜா பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.
சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றி பேசிய பிரபல அரசியலாளர் H.ராஜா, “மோகன்.ஜி அண்மைக்காலமாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை எடுத்து வருகிறார். திரௌபதி திரைப்படத்தில் ஒரு உண்மை நிகழ்வை எடுத்திருந்தார். இதேபோல ருத்ரதாண்டவம் திரைப்படத்தையும் எடுத்திருந்தார்.
திரௌபதி படத்தை வெளியிடுவதற்கு ஏகப்பட்ட தடைகளை சில கட்சிகள் செய்தனர். இந்த நிலையில் மோகன்.ஜி அடுத்ததாக இளம் பெண்கள் சிக்கிக்கொள்ளும் சமூக பிரச்சனையை முன்னிறுத்தி பகாசூரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டியது. குழந்தைகள் செல்போனில் படிப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் இருக்கும் செயலிகள் உள்ளிட்டவை அவர்கள் ஒழுக்கத்தை மீறி நடப்பதற்கு துணை போகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வை நாம் பெற வேண்டும்.
ஒரு கத்தி டாக்டரிடம் இருந்தால் உயிரை காப்பாற்றும். அதுவே கொலைகாரனிடம் இருந்தால் உயிரை கொல்லும் என்பது மாதிரிதான். அத்துடன் ஒழுக்கமே தேவையே என்கிற எண்ணத்தை வளர்க்கக்கூடிய விதைகளை விதைக்க கூடிய அரசியல் தளங்கள் உள்ளன. எனவே நாம் விழிப்புணர்வு பெற்று நம் எதிர்கால சந்ததியை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.