'இந்த போட்டோல இருக்குறவங்கள பத்தி துப்பு கொடுத்தீங்கன்னா...' 'ஸ்மார்ட்டா ஷட்டரை ஓப்பன் பண்ணி ஆட்டைய போட்ருக்காங்க...' கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 02, 2020 10:51 AM

செல்போன் கடைகளில் புகுந்து 150-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களைக் கொள்ளையடித் கொள்ளையர்களின் படங்களை, வேலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Police have released photos of robbers in cellphone shopes

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த மாதம் 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட உயர் ரக ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதே நாள் இரவில், வேலூரில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த மூன்றுக் கடைகளிலும், ஒரே பாணியில் நவீன ஹைட்ராலிக் ஜாக்கியைப் பயன்படுத்தி ஷட்டர் உடைக்கப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரண்டு  நபர்கள் நடமாடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. சந்தேகத்துக்குரிய அந்த நபர்களைப் பார்க்கும்போது, பீகார் அல்லது ஒடிசாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறும் காவல்துறையினர், அந்த நபர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் குறித்து தகவல் தெரிந்தாலும் நேரில் பார்த்தாலும் உடனடியாகக் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

டி.எஸ்.பி-க்கள் பாலகிருஷ்ணன் (வேலூர்) - 94982 10143, துரைபாண்டியன் (காட்பாடி) - 94981 05993, வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் - 94981 09959, காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் - 94981 11427.

``துப்பு கொடுக்கும் நபர்களின் ரகசியம் வெளிவராமல் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குக் காவல்துறை தரப்பில் தக்க சன்மானமும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்’’ என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #MOBILESHOP