‘பால் தொழிற்சாலையில் கசிந்த விஷ வாயு’.. ‘நீர்மின் நிலையத்தில் தீவிபத்து!’.. அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள்.. பரிதாப நிலையில் மருத்துவமனையில் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பால் தொழிற்சாலையில் கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவமும், மின் நிலையத்தில் உண்டான தீவிபத்தில் மக்கள் காயமாகிய சம்பவமும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பந்தபள்ளியில் பால் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை செய்து வந்த 20 ஊழியர்கள் நேற்று மாலை அடுத்தடுத்த மயங்கி வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் உடனே, மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செய்ய ஏற்பாடுகளைச் செய்தது.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பால் தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வாயு கசிந்துள்ளதுதான் இதற்கு காரணம் என தெரியவந்தது. பால் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் ஆந்திர மாநில மக்களிடையே மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக ஆந்திராவில் வாயு கசிவு சம்பவங்களிலிருந்து ஊழியர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இதேபோல் தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் அணையில், பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டு தீ விபத்தும் ஏற்பட்டது. இதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இதுவரை தீ விபத்தில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் சிக்கியுள்ள இன்னும் சிலரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.