'விசாகப்பட்டினம் ரசாயன விபத்தைத் தொடர்ந்து'.. 'நெய்வேலி' அனல் மின் நிலைய 'பாய்லர் வெடித்த' சம்பவத்தில் ஒருவர் 'உயிரிழப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 08, 2020 11:23 PM

ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

One dead in TN Neyveli Thermal plant boiler blast

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் நேற்றைய தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனினும் இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த 8 பேரில் நிரந்தர ஊழியரான சர்புதின்(54) என்பவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.