'எங்களால தான் நீ சம்பாதிக்குற...' 'பணி செய்ய வந்த கழிவுநீர் வாகன ஓட்டுனரிடம்...' 'தகாத வார்த்தைகளால் திட்டிய முதியவர்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த முதியவர் கழிவுநீர் லாரி ஓட்டுனரை தகாத வார்த்தையால் திட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த 10 ஆம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கழிவு நீர் வாகனம் ஓட்டும் மணிகண்டன் அவர்கள் சந்திரசேகர் என்பவர் மீது தன்னை மிக தரக்குறைவாக பேசினார் என வழக்கு பதிவு செய்துள்ளார்.
போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில், மணிகண்டன் சென்னை பள்ளிகரணை ஐஐடி காலனி 7-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவுநீர் எடுப்பதற்காக சென்றதாக கூறியுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் சந்திரசேகர் என்னும் முதியவர் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
சந்திரசேகர் இழிவாக பேசியதை வீடியோ ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் அளித்துள்ளார் சென்னை நாராயணபுரத்தை சேர்ந்த மணிகண்டன்.
மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கேவலமான வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சந்திரசேகரை மீது 294-B என்ற பிரிவீன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது சந்திரசேகர் இழிவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறதும் இணையதள நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கழிவுநீர் லாரி ஓட்டுநரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சந்திரசேகர் திட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
