'சத்தியம்' பண்ணிங்களே! 'ஓட்டு' போட்டிங்களா...? வாங்குன 'கிஃப்ட்' எல்லாம் திருப்பிக் குடுங்க...! உள்ளாட்சித் தேர்தல் 'அட்ராசிட்டிஸ்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 11, 2020 07:16 PM
ராசிபுரம் அருகே, தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு வழங்கிய அன்பளிப்புகளை திரும்ப வழங்குமாறு நோட்டீஸ் வழங்கும் புதுமை அரங்கேறியுள்ளது.

இராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரா. புதுப்பாளையம் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு 72 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இதனால் மனமுடைந்த ரமேஷ், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுத்த அன்பளிப்புகளை திருப்பி வழங்குமாறு நோட்டீஸ் அடித்து விநியோகித்து வருகிறார். அதில், வாக்களிப்பதாக உறுதி கூறி அன்பளிப்பை பெற்றுக் கொண்டவர்கள், அதை திருப்பி கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், வேட்பாளரிடம் உறுதியளித்து துரோகம் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இனிவரும் தேர்தல்களில் அன்பளிப்பு வாங்காமல் வாக்களிக்குமாறும் வாக்களர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், அவரிடம் அன்பளிப்பு வாங்கிய வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
