'நீதிமன்ற தியானத்தை'.. அடுத்து தர்காவுக்குள் புகுந்த நிர்மலாதேவி.. பரபரப்பு சம்பவம்.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 08, 2019 06:45 PM

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி.

Nirmala Devi allegedly does mediation, goes bizarre

நீண்ட பெரும் சர்ச்சைகளையும், பலவிதமான விவாதங்களையும் எழுப்பிய இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி-யில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி, பயணித்துக் கொண்டிருந்தது. இதன் ஒரு அங்கமாக நிர்மலாதேவி தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுமிருக்கிறார்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணைக்காக ஆஜரான நிர்மலாதேவிக்கு, கோர்ட்டார் வாய்தா தேதியினை அறிவித்த பின்பும், அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தனது முடியை சிறிது வெட்டி தன் காதருகே வைத்துக்கொண்டு முணுமுணுத்துள்ளார்.

மேலும், தனக்கு அருள் வந்துள்ளதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானம் செய்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி அமர்ந்த புகைப்படமும், வீடியோக்களும் இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

Tags : #NIRMALADEVI