"பெண் என நினைத்து தூக்கிட்டு போய்ட்டாங்க".. மறைந்த நெல்லை தங்கராஜ் வாழ்வின் துயரமான மறுபக்கம்.. THROWBACK!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 03, 2023 04:12 PM

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் படமாக "பரியேறும் பெருமாள்" வெளியாகி இருந்தது. கதிர், ‘கயல்’ ஆனந்தி,  ‘பூ’ ராம், யோகிபாபு, மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Nellai Thangaraj emotional side throwback video

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அசிம் ஒண்ணும் Tough Competitor இல்ல, விக்ரமன் தான்".. ஷிவின் நாமினேட் செஞ்சதுக்கு பின்னாடி இப்டி ஒரு விஷயம் இருக்கா?

மேலும் இவர்களுடன் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நெல்லை தங்கராஜ், படத்திலும் தெருக்கூத்து கலைஞராக வரும் போது அவர் மீது ஒடுக்கம் செலுத்தப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான இவர் படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் தெருக்கூத்து கலைஞராக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக, நெல்லை தங்கராஜின் வறுமை நிலை கருதி, நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து அவருக்கு புதிய வீடு கட்டி கொடுத்திருந்தது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இவர் தற்போது உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். இவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலகினரும், ஏனைய கலைஞர்களும் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Nellai Thangaraj emotional side throwback video

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், நெல்லை தங்கராஜ் முன்பு உருக்கமாக பேசி இருந்த விஷயங்கள் தொடர்பான Throwback வீடியோக்கள், பலரையும் மனம் நொறுங்க வைத்து வருகிறது.

இது தொடர்பான வீடியோவில் பேசும் நெல்லை தங்கராஜ், "நல்லா டிரெஸ் பண்ணி 2 பாட்டுக்கு ஆடிட்டு இருந்தேன். நான் போகும் போது வெளியூர்ல இருந்து 4, 5 பேர் வந்திருந்தாங்க. அப்ப நான் லேடின்னு நெனச்சு என்ன அவங்க தூக்கி என்னை முள்ளுக்காட்டுக்குள்ள கொண்டு போய்ட்டாங்க. எப்படி அங்கிருந்து தப்பிக்கலாம்ன்னு பாத்துட்டு இருந்தேன். அதுல ஒருத்தன் கத்தி வெச்சுருந்தான். தப்பிக்கப் பாத்தா சொருகிடுவேன்னு சொன்னான்" என தெரிவித்திருந்தார்.

Nellai Thangaraj emotional side throwback video

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, அவர்கள் தவறான வார்த்தைகளை பேசியதாகவும், பின்னர் திட்டம் போட்டு ஒரே ஓட்டத்தில் அங்கிருந்து ஓடி தான் தப்பித்து ஊர் மக்களிடம் போனதாகவும் குறிப்பிடும் நெல்லை தங்கராஜ், பின்னர் அவர்கள் அனைவரும் அந்த சம்மந்தப்பட்ட நபர்களை தேடியதில் சிக்கிய ஒருவனை போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்படி பல கொடுமைகளை தாண்டி தனது கலையில் நிலைத்து பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் மேலும் புகழ்பெற்ற நெல்லை தங்கராஜ் மறைவு, பலரையும் கலங்கடித்துள்ளது.

Also Read | "இப்டி கூட ஒரு ஷாட் அடிக்க Try பண்லாம் போலயே".. ஊருக்கே க்ளாஸ் எடுத்த CSK வீரர்.. வைரல் வீடியோ!!

Tags : #NELLAI THANGARAJ #NELLAI THANGARAJ THROWBACK VIDEO

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nellai Thangaraj emotional side throwback video | Tamil Nadu News.