'கூகுள் மேப் மேல கேஸ் போடணும் சார்...' 'நான் போகாத இடத்தையெல்லாம் போனதா காட்டுது...' பொண்டாட்டி சந்தேகப்படுறாங்க...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 21, 2020 05:02 PM

கணவரின் துணைக்கு கூகுள் மேப்பை அனுப்பிய மனைவி, கணவர் செல்லாத இடத்தையும் காட்டியதால் கணவர், கூகுள் மேப் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம்  அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

man filed case against google map for showing wrong details

வணிக நிறுவனம் நடத்தும் ஆர்.சந்திரசேகரன் என்பவர் மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி சந்திரசேகர், பணியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது ஒரு நாள் தவறாமல் அவரின் செல்போனை வாங்கி, அதில் கூகுள் மேப்பின் யுவர் டைம் லைன் பகுதியை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போல் கடந்த 20-ம் தேதியும் செக் செய்யும் போது, சந்திரசேகரனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்று வந்ததாக காட்டியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரின் மனைவி, மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பத்தில் சண்டையும் வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றியே சிந்தித்து கொண்டு இரவு நேரங்களில் தூங்காமல் இருந்ததால், சந்திரசேகரின் மனைவிக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட்டதோடு, அவரது குடும்பத்தினரையே பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

கூகுள் மேப் ஆப் தவறாக காட்டுகிறது என குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்டிய கணவனை நம்பாமல் கூகுள் மேப்பை நம்பியுள்ளார்.

இதனால் கூகுள் மேப் ஆப் உண்மைக்கு மாறான தவறான தகவல்களை காட்டுவதால் குடும்ப சிக்கல், குடும்ப வன்முறை, சித்ரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக சந்திரசேகரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதில், கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #GOOGLEMAP