‘நேசமணிக்கு போட்டியாக கேரளாவில் டிரெண்டாகும் புது ஹேஸ்டேக்’.. அப்டி என்னவா இருக்கும்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 30, 2019 06:25 PM

உலகளவில் டிரெண்டான ‘ப்ரே ஃபார் நேசமணி’ ஹேஸ்டேக் போல கேரளாவிலும் ஒரு ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Kerala netizens tweet on pray_for_lasarelayappan

கடந்த 2001 -ம் ஆண்டு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை கதாப்பாத்திரத்தின் பெயர்தான் காண்ட்ராக்டர் நேசமணி. இன்று உலகளவில் டிரெண்டாகி தமிழகத்தை உலகறிய செய்துள்ளது.

பேஸ்புக்கில் இரு நண்பர்கள் விளையாட்டாக பகிர்ந்து கொண்ட சாதராணமான விஷயம் இன்று உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இது குறித்த சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர்,‘தாங்கள் விளையாட்டாக பேசிக்கொண்டது இவ்வளவு பெரியளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கவில்லை. இது ஏதும் திட்டமிட்டு செய்யவில்லை. எதர்ச்சையாக நடந்ததுதான்’ என தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு, ‘நேசமணி போன்ற கதாப்பாத்திரங்கள் கிடைத்தது ஆண்டவன் கொடுத்த பரிசு’ என தெரிவித்தார்.

இந்நிலையில் ப்ரண்ட்ஸ் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மலையாளப்படத்தில் வடிவேலு நடித்த ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஒருவர்‘செக்கஞ்சம்பரம்பில் லாசர்’ என்னும் பெயரில் நடித்திருப்பார். இதனால் காண்டாக்டர் நேசமணிக்கு நடந்ததைப் போல கேரளாவில் காண்ட்ராக்டர் லாசர் எலயப்பன் என்பவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நாங்க அனைவரும் உங்கள் நேசமணிக்கு ஆதரவு தருகிறோம். அதேபோல் எங்கள் லாசர் எலயப்பனுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் என #Pray_For_LasarElayappan என்னும் ஹேஸ்டேக்கை கேரளாவில் பதிவிட்டுவருகின்றனர்.

Tags : #PRAY_FOR_LASARELAYAPPAN #VADIVELU4LIFE #PRAY_FOR_NAESAMANI