“100 சவரன் நகை.. 95 லட்ச ரூபாயில் சொகுசு பங்களா.!”.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி திருடியது எப்படி? விளக்கும் க்ரைம் ரிப்போர்ட்டர்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வீட்டில் 60 பவுன் தங்க ஆபரணங்கள், வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய் உள்ளது என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
Also Read | Ponniyin Selvan : "வைரமுத்துவுக்கு மாற்றா?" - ‘பொன்னியின்செல்வன்’ பாடலாசிரியர் பரபரப்பு விளக்கம்.
இது தொடர்பான தமது புகாரில், தம் வீட்டில் பணியாற்றிய வேலை ஆட்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் கூறியிருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில், கடந்த 19.09.2019-ம் ஆண்டு முதல் 10.02.2023 வரை இடைப்பட்ட காலத்தில் 60 சவரன் தங்க, வைர நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் காணாமல் போனதாகவும் தனது வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் வெங்கட் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பேசியுள்ள சென்னை க்ரைம் ரிப்போர்டர் செல்வராஜ், “எல்லா பணியாளர்களுமே முதலாளி வழங்கும் சேவை, சலுகைகளை பெறுவதுடன் நிறுத்திக்கொள்வதில்லை. சிலர் படிப்படியாக ஒரு ஒரு பொருளாய் தெரியாமல் எடுக்கவும் செய்கின்றனர். அப்படித்தான் ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக 100 சவரனாக எடுத்திருக்கிறார். இது ரொம்ப நாளாக நடந்த திருட்டு விஷயம். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இருந்த பிஸியான சூழலில் திடீரென இப்போது பார்க்கும்போது அனைத்தும் தெரியவருகிறது. இந்த நகைகள் ஏற்கனவே இருந்தவை மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமணத்திற்கு பிறகாக இந்த லாக்கரில் வைக்கப்பட்டவை என தெரிகிறது. அத்துடன் செயிண்ட் மேரிஸ் சாலை, அதன் பிறகு சிஐடி நகர் இப்போது போயஸ் கார்டன் என 3 வீடுகள் மாறிவிட்டார் ஐஸ்வர்யா.
இப்போது நகைகள் மிஸ் ஆகும்போது, அவருக்கு அதிர்ச்சி ஆகிறது. ஆனால் எல்லா நகைகளையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள். பிரத்தியேகமான பல நகைகள் நினைவுகளாகவும் எங்கு வாங்கினார்கள் என்பது உட்பட மனதில் பதிந்தவையாக இருக்கும். எனவே புகார் கொடுக்கப்படுகிறது. ஒரு செலிபிரிட்டியின் வீட்டில் இப்படி நடக்கிறது. திருடிய ஈஸ்வரி என்பவர் தான் திருடிய 100 சவரன் தங்க நகை, 30 கிராம் டைமண்ட் நகை, 4 கிலோ வெள்ளி ஆபரணங்கள் என 3 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்தையும் உருக்கி விற்று 95 லட்சம் ரூபாயாக மாற்றுகிறார்.
பின்னர் சோழிங்கநல்லூரில் ஒரு அபார்ட்மெண்ட்டை கடனில் வாங்குகிறார். ஆனால் அதற்கான பணத்தை இந்த 95 ரூபாய் லட்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா கட்டி வருகிறார். இப்படியே 2 வருடம் போக, கடைசியில் முழுத்தொகையை கட்டி கடனை க்ளோஸ் செய்துள்ளார். இப்படி செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என கருதியுள்ளார். ஒரு பணிப்பெண் எப்படி இப்பேற்பட்ட வீட்டை வாங்கியுள்ளார் என்றால் அவர் வீட்டுக்கடன் பெற்றுள்ளார் என நினைத்துவிடுவார்கள். அதனால் அதை சாதகமாக கருதியுள்ளார். வங்கிப்பரிவர்த்தனைகளை பரிசோதனை செய்தால் போதும் இவை தெரியவரும்.
போலீஸார் இந்த விசயங்களை விசாரணையில் கண்டுபிடித்துவிட, ஈஸ்வரி ஒப்புக்கொள்கிறார். இதனால் ஈஸ்வரியும், ஈஸ்வரிக்கு உதவிய திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கைதாகினர். இவர்கள் யாரிடம் உருக்கி விற்றார்களோ அவர்களும் பிடிக்கப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுவிட்டன. அதை கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். ஆனால் இந்த விவகாரத்தை பொறுத்தவரை, உடன்பிறந்தவர்கள், சொந்தக்காரர்களே இப்படி நடந்துகொள்ளும்போது யாரையுமே நம்ப முடியாது. ஒரு 50 வருசம் முன்னாடியெல்லாம் வாய் வார்த்தையில் சொல்வதே ஆவணம் ஆகும். அப்போது வாக்குதான். இப்போதெல்லாம் ரிஜிஸ்டர் பண்ணினாலும் மேற்கொண்டு பல ஆவணங்கள் தேவை. காரணம் நம்பிக்கையின்மைதான். புருசன் பொண்டாட்டிய கொல்கிறார், பொண்டாட்டி புருசனை கொல்கிறார். யாரைத்தான் நம்புவது? ஒரு அட்வைஸாக சொல்லணும்னா யாரையுமே நம்பாதீர்கள். லாக்கரில் நகைகளை வைக்கும்போது சாவியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் இருக்கும்போது அறையில் அனுமதியுங்கள், இல்லாதபோது அதற்குண்டான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுங்கள்.” என தெரிவித்தார்.
Also Read | விஜய் டிவி தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.. “தமிழின்றி நாம் இல்லை..” - வாழ்த்திய தமிழக முதல்வர்.!