‘2 நாள்ல விநாயகர் சதுர்த்தி!’.. ‘கொண்டாடுவது’ குறித்து ‘தமிழக அரசு வெளியிட்டுள்ள’ புதிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்துள்ளதாகக் குறிப்பிட்ட தமிழக அரசு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில். “இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29-07-2020 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் 22-08-2020 அன்று கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை தவிர்க்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோதனையான இந்த கொரோனா சூழலில் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே "விநாயகர் சதுர்த்தி விழாவை" கொண்டாடுமாறு அரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/304KkSYSYJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 20, 2020
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.