“மங்களகரமா காலையில எழுந்த பழனி மக்கள்”.. தெருக்கள் முழுவதும் வாசல் முன் காத்திருந்த ‘நடுங்க வைக்கும்’ காட்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோயில் நகரம் பழனி.இங்குள்ள தேவங்கர் தெருவில் வசிக்கும் மக்களுக்கு இன்று காலை எழுந்ததுமே கண்ட அதிர்ச்சி காட்சி என்னவென்றால் இந்த தெருவில் வசிப்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு சிதறிக்கிடந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை கண்டதுதான்.

மண்டையோடுகள் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிற பொடிகள் தூவப்பட்டு ஒவ்வொருவரின் வீட்டு கதவுகள் மற்றும் வாசல்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதுபோன்று குறைந்தபட்சம் நான்கு வீடுகள் மற்றும் ஒரு கடைக்கு முன்னால் மண்டை ஓடுகள் இருந்ததை கண்டு, ‘மந்திரவாதிகள் யாராவது செய்வினை வைத்து இருக்கலாம்’ என்று மக்கள் பயந்து போயுள்ளனர்.
அதேசமயம் குடித்துவிட்டு அப்பகுதி இளைஞர்கள் இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி உள்ளூர் போலீசாரிடம் யாரும் முறையாக புகார் எதுவும் அளிக்கவில்லை, எனினும் சந்தேக நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
