'12 மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு விற்ற சிறுமி'... 'நீ கொடுமா நானே வாங்கிக்குறேன்'... 'அசர வைத்த தொழிலதிபர்'... கண்கலங்க வைத்த பின்னணி காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்குத் தொழிலதிபர் வாங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் நினைக்கலாம் 2 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு அந்த தொழிலதிபர் ஏன் வாங்கினார் என்று. அதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் நிச்சயம் பலரைக் கண்கலங்கச் செய்யும். இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் 11 வயதான துளசி குமாரி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளும் மூடப்பட்டது. தான் கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்து விட வேண்டும் என அந்த தந்தை நினைத்தாலும் அதற்கான வழியும் பிறக்கவில்லை. காரணம் பள்ளிகள் மூடப்பட்டதால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாததால் சிறுமி துளசி குமாரியால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.
இதனால் தந்தைக்கு உதவியாகச் சிறுமி துளசி குமாரியும் சாலையோரத்தில் மாம்பழங்களை விற்கத் தொடங்கினார். அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிட்டிருந்தார் சிறுமி குமாரி. இந்த நிலையில், சிறுமி துளசி குமாரி குறித்த தகவல் இணையத்தில் வைரலான நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு சென்று துளசியைத் தேடிக் கண்டுபிடித்தார்.
அதோடு 12 மாம்பழங்களைக் கையேடு வாங்கிய நிலையில், அதற்கான தொகையை துளசியின் தந்தையின் வங்கிக் கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஆன்லைன் வழியாகச் செலுத்தினார். மேலும் இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வைத்துத் தொடர்ந்து படிக்க வேண்டும் என துளசியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். ஹீட்டேவின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே துளசி குமாரி புது மொபைல் வாங்கிய மகிழ்ச்சியில் ஆன்லைன் வகுப்பை பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் படிப்பைக் கைவிட்டு விடக் கூடாது என நினைத்த துளசி குமாரியையும், சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்து உதவி செய்த தொழிலதிபர் ஹீட்டேவின் செயலும் பலரையும் நெகிழச் செய்துள்ளது.