'சுந்தரி அக்கா கடைக்கு அடித்தது ஜாக்பாட் '...'நெகிழ்ந்த அக்கா'...செம குஷியில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 16, 2019 09:35 AM
சென்னையில் இருக்கும் உணவு பிரியர்களுக்கு நிச்சயம் சுந்தரி அக்கா கடையை தெரியால் இருக்க வாய்ப்பில்லை. அவரின் மீன் குழம்பும் ஈரால் வறுவலும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலம்.
சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் நீச்சல் குளத்திற்கு இடையே தான் இவரின் கடை அமைந்திருக்கிறது. சுந்தரி என்பவர் இந்த கடையை நடத்தி வருவதால் காலப்போக்கில், அவரது கடையை சுந்தரி அக்கா கடை என பலரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இவரது கடையில் மீன் குழம்பு, மட்டன், ஈரால் என அசைவ உணவுகள் மிகவும் பிரபலம்.
பல தரப்பட்ட உணவகங்களில் சாப்பிட்டு அந்த உணவை விமர்சனம் செய்யும் புஃட் பிளாக்கர்கள் மூலமாக அவரது கடை மிகவும் பிரபலம் அடைந்தது. இதையடுத்து பலதரப்பட்ட மக்களும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். இந்நிலையில் சுந்தரி அக்கா கடைக்கு தமிழக அரசு அளித்திருக்கும் அங்கீகாரம் அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்தும் இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு அளித்திருக்கும் அங்கீகாரம் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து பேசிய அவர், ''இந்த அங்கீகாரம் வாடிக்கையாளர்களால் தான் கிடைத்திருக்கிறது. எனவே தனது கடைக்கு கிடைத்திருக்கும் சான்றிதழை தனது வாடிக்கையாளர்களுக்கு சமர்பிப்பதாக'' அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே இது போன்ற சான்றிதழ்கள், உணவின் தரம் குறித்த நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளார்கள்.