ஒரு வாரமா பாசமா வளர்த்த யானைக்குட்டி.. பிரிஞ்சு போற நேரத்துல கண்ணீர்விட்ட அதிகாரி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 17, 2023 10:27 AM

தர்மபுரி அருகே ஒரு வாரமாக பாசமாக வளர்த்து வந்த யானைக்குட்டி தன்னை விட்டு பிரிவதை கண்டு வனத்துறை அதிகாரி ஒருவர் கண்ணீர் விட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Forest Officer Breaks down after Baby Elephant Leaves Him

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!

மீட்கப்பட்ட யானைக்குட்டி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அவற்றுள் சில அருகில் உள்ள விளை நிலங்கள் மற்றும் மக்கள் வாழும் இடங்களுக்கு தவறுதலாக வந்து விடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 11 ஆம் தேதி நீர்க்குந்தி பகுதியில் ஆண் யானை குட்டி ஒன்று வந்திருக்கிறது. விளைநிலத்தில் சுற்றித்திரிந்த இந்த யானை குட்டி தவறுதலாக கிணற்றில் விழுந்து இருக்கிறது. இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருக்கின்றனர்.

தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் யானை குட்டியை கிணற்றிலிருந்து பத்திரமாக மீட்டிருக்கின்றனர். இருப்பினும் யானை குட்டியின் தாயை கண்டுபிடிக்க முடியாததால் ஒகேனக்கல் வனப் பகுதியில் உள்ள ஒட்டர்பட்டி பகுதியில் வைத்து வனத்துறை வீரர்கள் இதனை பராமரித்து வந்தனர். வனத்துறை கால்நடை மருத்துவர்கள் இந்த யானை குட்டிக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். அதன்பின்னர் வன ஊழியர் மகேந்திரன் இந்த யானை குட்டிக்கு தினசரி இளநீர் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட உணவுகளை அளித்து வந்திருக்கிறார்.

Forest Officer Breaks down after Baby Elephant Leaves Him

Images are subject to © copyright to their respective owners.

கண்ணீர் விட்ட அதிகாரி

இதனிடையே, வனத்துறை உயர் அதிகாரிகள் ஒகேனக்கல்லில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக முதுமலைக்கு இந்த யானைக் குட்டியை அனுப்பிவைக்க முடிவெடுத்தனர். இதற்கான சிறப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு இருந்தது. அதன்மூலம் இந்த யானைக்குட்டி முதுமலையில் உள்ள யானைப்பாகன் பொம்மனிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

Forest Officer Breaks down after Baby Elephant Leaves Him

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் ஒருவார காலம் தான் பாசத்துடன் பராமரித்து வந்த யானைக்குட்டி தன்னை விட்டு பிரிவதை கண்டு வன ஊழியர் மகேந்திரன் கண்ணீர் சிந்தியிருக்கிறார். யானைக்குட்டி வாகனத்தில் ஏற்றப்படுவதை கண்டு கலங்கிய அவரை சக ஊழியர்கள் சமாதானம் செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | மத்தியான நேரத்துல திடீர்னு இரவாக மாறிய வானம்.. அதிர்ந்து போன மக்கள்.. வீடியோ..!

Tags : #FOREST OFFICER #BABY ELEPHANT

மற்ற செய்திகள்